குடிநீரை அசுத்தப்படுத்திய சினிமா படக்குழு ஊட்டியிலிருந்து வெளியேற்றம்!
ஊட்டியில் குடிநீர் எடுக்கும் நீர்த்தேக்கத்தை அசுத்தப்படுத்தியதால், சினிமா படப்பிடிப்புக் குழுவுக்கு அனுமதி மறுத்து, வெளியேற்றியது ஊட்டி நகராட்சி நிர்வாகம்.
ஊட்டியில் உள்ள டைகர்ஹில் நீர்த்தேக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு நகராட்சி நிர்வாகம் அனுமதி தந்தது.
அனுமதி பெற்ற சினிமா குழுவினர், நேற்று காலை படப்பிடிப்பு நடத்தினர். "படக் குழுவினர், அனுமதிக்கு மாறாக குடிநீரை மாசுபடுத்தி, அத்துமீறுவதாகவும், குடிக்கும் நீர் கெட்டுவிட்டதாகவும்' அப்பகுதி மக்கள், புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து சினிமா குழுவினருக்கு வழங்கிய படப்பிடிப்பு அனுமதியை, நகராட்சி கமிஷனர் ரத்து செய்தார்; படப்பிடிப்பு குழுவினரை அப்பகுதியிலிருந்தும் வெளியேற்றியுள்ளார்.
Comments


Click it and Unblock the Notifications