நமீதா-பாலகிருஷ்ணா படப்பிடிப்பில் ரகளை!

By Staff

Namitha
தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா- நமீதா ஜோடியாக நடிக்கும் படப்பிடிப்பில் பெரும் ரகளை செய்தனர் தெலுங்கானா ஆதரவாளர்கள்.

மறைந்த ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி. ராமாராவின் மகனும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகருமான பாலகிருஷ்ணா தற்போது சிம்மா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நமீதா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று ஹைதராபாத் அருகே உள்ள ராம்பள்ளி தாயரா என்ற கிராமத்தில் நடந்தது.

இதையறிந்த தெலுங்கானா ஆதரவாளர்கள் அங்கு திரண்டனர். அவர்கள் திடீரென இங்கு ஆந்திர நடிகர் பாலகிருஷ்ணா நடிக்கும் படப்பிடிப்பை நடத்த அனுமதிக்க மாட்டோம். இங்கு படப்பிடிப்பு நடத்தினால் கேமராவை அடித்து நொறுக்குவோம் என்று கூறி ரகளையில் ஈடுபட்டனர்.

இதையறிந்ததும் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். தெலுங்கானா ஆதரவாளர்களை அங்கிருந்து விரட்டி அடித்தனர் போலீசார். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.

படப்பிடிப்பு நடத்த கடும் எதிர்ப்பு கிளம்பியதால் இயக்குநர் சீனு, தயாரிப்பாளர் பரிசூரி ஆகியோர் படப்பிடிப்பை ஆந்திரா பகுதிக்குள் நடத்த முடிவு செய்து உடனே கிளம்பினர்.

இப்படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகர் தர்ஜான் கூறுகையில், "நானும் தெலுங்கானா பகுதியைச் சேர்ந்தவன்தான். தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி தலைவர் சந்திர சேகரராவின் சுய நலத்தால் தெலுங்கானா பகுதியே நாசமாகி விட்டது. நாட்டின் மிகப் பெரிய தொழில் நகர மாக மாறிக்கொண்டிருந்த ஐதராபாத்தில் அமைதியின்மையை ஏற்படுத்தி நாசப்படுத்திவிட்டனர் அவரும் அவரது ஆதரவாளர்களும். சந்திர சேகரராவை நாடு கடத்த வேண்டும் என்றார்.

படப்பிடிப்பு நடப்பதற்கு முன்பே ரகளை நடந்தது தெரிய வந்ததால், நடிகர் பாலகிருஷ்ணா ராம்பள்ளி தாயரா கிராமத்திற்கு செல்லவில்லை. இதுகுறித்து அவர் கூறுகையில் "படப்பிடிப்பில் ரகளை செய்வது அநாகரீகமானது" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X