200 ஆண்டுகளுக்கு முந்தைய 'தேவலீலை'!

உலக சக்தி அனைத்தும் தனக்கே வரவேண்டும் என்று ஒருவன் தவமிருந்து பெறுகிறான். அவனுடைய தகாத செய்கையால் ஒரு சாபம் பெறுகிறான்.
பவுர்ணமி இரவுக்குள், அவன் ஒரு வேலையை செய்தாக வேண்டும். அப்போதுதான் இருக்கிற சக்திகளை தக்கவைத்துக் கொள்ள முடியும். தவறினால் எல்லாம் பறிபோய்விடும் என்ற நிலை.
இதை அவன் செய்து முடித்தானா இல்லையா என்பதை கிளைமேக்சாக வைத்து தேவலீலை படத்தை உருவாக்கி வருகின்றனர்.
200 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று எடுக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்புகள் மனித நடமாட்டம் இல்லாத பகுதிகளில் மட்டுமே நடக்கிறது.
சிருங்கேரி, தர்மஸ்தலா, குதிரைமுக்கு, செஞ்சி, சித்தூர், பெங்களூர் ஆகிய ஊர்களுக்கு அருகில் உள்ள மலைகள், காடுகள் அடர்ந்த பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
கதையின் நாயகன் தனக்குமார். நாயகிகள் ரூபா பட், கவிதா, ஸ்வேதா, புஷ்பா நாயக், சுனிதா என மொத்தம் ஐந்து பேர்.
நாயகன் கூடுவிட்டு கூடு பாய்வது போன்ற கிராபிக்ஸ் காட்சிகளும் உண்டாம்.
கதை-திரைக்கதையை துளசி எழுதியுள்ளார். ஒளிப்பதிவு-இயக்கம், கிருஷ்ணா-பிரபாகர். இசை, துர்கா. தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் இப்படம் தயாராகிறது.


Click it and Unblock the Notifications











