சல்மான் என்னை தாய்போல் கவனித்துக் கொண்டார்-அசின் உருக்கம்!

By Chakra

மும்பை: உடல்நலமில்லாத தன்னை தாயைப் போல கவனித்துக் கொண்டார் சல்மான்கான் என்று உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார் நடிகை அசின்.

ரெடி இந்திப் படத்தில் சல்மான்கான் அசின் ஜோடியாக நடிக்கின்றனர். படப்பிடிப்பு முடியும் கட்டத்தில் உள்ளது. இருவருக்கும் காதல் மலர்ந்து, கல்யாணம் வரை போய்விட்டதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

சமீபத்தில், இருவரும் திருமணம் செய்து கொண்டுவிட்டதாக செய்திகள் வந்துள்ளதே என்று தொலைக்காட்சி பேட்டியொன்றில் கேட்கப்பட்டது.

அதற்கு சல்மான்கான் பதில் அளிக்கையில் அப்படி நடந்து இருந்தால் ரொம்ப சந்தோஷப்படுவேன் என்றார். அசின் குறுக்கிட்டு சல்மான்கான் ஜோக்கடிக்கிறார் என்று சொல்லி நழுவினார். இதற்கிடையில் ரெடி படப்பிடிப்பில் சல்மான்கான் தாய் போல் தன்னை கவனித்துக் கொண்டதாக அசின் கூறினார்.

இது குறித்து அவர் கூறுகையில், "ரெடி படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக இடைவெளியில்லாமல் நடக்கிறது. தினமும் காலை 6 மணிக்கே மேக்கப்போட்டு தயார் ஆகிறேன். இடையில் அரை மணி நேரம் மதிய சாப்பாடு, பிறகு மாலை 6 மணிவரை படப்பிடிப்பு. ஓய்வில்லாமல் நடித்ததால் எனக்கு காய்ச்சல் வந்து விட்டது. கிளைமாக்ஸை 25 முக்கிய நடிகர்களை வைத்து எடுக்க ஏற்பாடு செய்திருந்தனர்.

படப்பிடிப்பை நிறுத்தினால் மீண்டும் அவர்களை ஒன்று சேர்ப்பது கஷ்டம் என்றார் தயாரிப்பாளர். வேறு வழியின்றி காய்ச்சலோடு நடித்தேன். அப்போது மணிக்கு ஒரு தடவை சல்மான்கான் டாக்டர்கள் சொன்னபடி மருந்து மாத்திரை கொடுத்தார். பழரசங்களும் கொடுத்தார். பக்கத்தில் அப்பா, அம்மா இல்லாத குறையை, ஒரு அம்மா போல இருந்து தீர்த்து வைத்தார். அவர் ரொம்ப நல்ல மனிதர். சல்மான் கானால்தான் சீக்கிரம் குணமானேன்," என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X