கார் விபத்தில் கால் கொலுசு படத்தின் நாயகியான நீத்து காயமடைந்தார்.

இப்படத்தின் படப்பிடிப்பை ஆலப்புழையில் வைத்திருந்தனர். இதற்காக தனது அம்மாவுடன் நீத்து கார் மூலம் திண்டுக்கல் வழியாக ஆலப்புழைக்கு பயணப்பட்டார்.அப்போது திண்டுக்கல் அருகே கார் வந்தபோது திடீரென ஒரு லாரி, கார் மீது மோதியது.
இதில் நீத்துவும், அவரது தாயாரும் காயமடைந்தனர். உடனடியாக அவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
தகவல் கிடைத்ததும் ஆலப்புழை படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டு அத்தனை பேரும் திண்டுக்கலுக்கு ஓடி வந்து நீத்துவையும், அவரது தாயாரையும் பார்த்து நலம் விசாரித்தனர்.
Comments
actress neetu injured கார் விபத்தில் நடிகை காயம் கால் கொலுசு நாயகி நீத்து நடிகை நீத்து காயம் car accident kaal kolusu heroine neetu


Click it and Unblock the Notifications