எந்திரன் படப்பிடிப்பில் விபத்து!

உடனே அவரை அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் படக்குழுவினர்.
சென்னை மற்றும் சுறறுப்புறப் பகுதிகளில் எந்திரன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் சென்னையை அடுத்த கொட்டிவாக்கத்தில் படப்பிடிப்பு குழுவினர் கூடினர். அப்போது தனியார் நிறுவனம் ஒன்றில் சில காட்சிகள் எடுக்கப்பட்டதுடன், இதற்கான ஒளியமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. அப்போது திடீரென மின்சாரம் தாக்கி சீனிவாசன் (20) னும் ஊழியர் விபத்துக்குள்ளானார். உடனே அவரை அருகே உள்ள மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர் படக்குழுவினர்.
எனினும், அவரது நிலமை மோசமாகவே சென்னை அடையாற்றில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு, அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சீனிவாசன் தற்போது கோமா நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக துரைப்பாக்கம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











