படப்பிடிப்பில் விபத்து: விஷாலுக்கு எலும்புமுறிவு

போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிகர் விஷால் கதாநாயகனாக நடிக்கும் படம் "சத்யம்". இதன் படப்பிடிப்பு, சென்னையை அடுத்த சோழவரத்தில் நடந்து கொண்டிருந்தது. சம்பவத்தன்று, விஷால் ஒரு வேனை விரட்டி செல்வது போன்ற காட்சி படமாக்கப்பட்டது.
படிக்கட்டில் கால் வைத்து வேனை தாண்டி குதிப்பது போன்ற காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தனர். அப்போது விஷால் எதிர்பாராதவிதமாக தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருடைய இடது கை மணிக்கட்டில் பலத்த அடிபட்டது.
அதிர்ச்சியடைந்த படக்குழுவினர் அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். விஷாலின் இடது கை மணிக்கட்டு எலும்பில் லேசான கீறல் ஏற்பட்டு இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ஓய்வு எடுக்கும்படி அவரை டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதைத்தொடர்ந்து சத்யம்' படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.


Click it and Unblock the Notifications











