குத்து ரம்யாவுக்கு 'குபீர்' திருமணம்!

குத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்த கன்னடத்து அழகிதான் ரம்யா. அன்று முதல் இவர் குத்து ரம்யா என்று அழைக்கப்பட்டார். ஆனால் இப்படி கூப்பிடாதீர்கள் என்று அன்புடன் கேட்டுக் கொண்ட அவர் தனது பெயரை ஒரிஜினல் பெயரான திவ்யா என்றும் மாற்றி வைத்தார். இருப்பினும் இன்றளவும் அவர் குத்து ரம்யா என்றே தமிழ் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டு வருகிறார்.
இந்த குத்து ரம்யாவுக்கு இன்று திருமணம் நடக்கிறது. யாருக்கும் சொல்லாமல் திடீரென ஏற்பாடு செய்துள்ளனர்...பயந்து பதறிப் போயிடாதீங்க, இது நிஜக் கல்யாணம் அல்ல, சினிமாக் கல்யாணம்தான்.
இந்தக் கல்யாணக் காட்சி குறித்து தனது ட்விட்டர் தளத்தில் இப்படிக் கூறியுள்ளார் ரம்யா...
நான் நடித்து வரும் படத்தில் இன்று எனக்கு கல்யாணம் நடக்கும் காட்சி. இந்தக் காட்சியை எத்தனை முறை எடுக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. எனக்கு எத்தனை கல்யாணமோ தெரியவில்லை. இங்கு வந்திருக்கும் புரோகிதர் மந்திரங்களுக்குப் பதில் இந்தியாவில் உள்ள அனைத்து இனிப்பு வகைகளின் பெயர்களையும் கூறிக் கொண்டிருக்கிறார். எனக்குப் பிடிச்ச ஸ்வீட் பெயரையும் சொல்வாரா என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார் ரம்யா.
ரம்யா தற்போது நடித்து வரும் கன்னடப் படத்தின் பெயர் தண்டம் தசகுணம். சிரஞ்சீவி சர்ஜா என்பவர்தான் இப்படத்தின் நாயகன். படத்தின் பாதிமுடிந்து விட்டதாம். இன்று நடைபெறும் கல்யாணக் காட்சி முக்கிய காட்சியாம்.
நல்லா கிளப்புறாங்கய்யா பீதியை...!
ரம்யா தற்போது நடித்து வரும் கன்னடப் படத்தின் பெயர் தண்டம் தசகுணம். சிரஞ்சீவி சர்ஜா என்பவர்தான் இப்படத்தின் நாயகன். இவரைப் பற்றி ஒரு வரி சொல்ல வேண்டும். இவர் வேறு யாருமல்ல, நம்ம ஆக்ஷன் கிங் அர்ஜூனின் சொந்தக்காரர்தான். அர்ஜூனின் பெயர் அர்ஜூன் சர்ஜா என்பது தெரிந்ததுதானே..! படத்தின் பாதிமுடிந்து விட்டதாம். இன்று நடைபெறும் கல்யாணக் காட்சி முக்கிய காட்சியாம்.


Click it and Unblock the Notifications











