தாராவியில் மங்காத்தா படப்பிடிப்பு!
பாங்காக், சென்னை என இரண்டு ஷெட்யூலில் மங்காத்தாவின் பெரும்பாலான பகுதிகளை எடுத்துவிட்டார் வெங்கட் பிரபு. இப்போது அடுத்த கட்டமாக மும்பைக்குப் பறக்கிறது மங்காத்தா யூனிட்.
மும்பையில் தமிழர் பெரும்பான்மையாக வாழும் பகுதியான தாராவியில் குறிப்பிட்ட சில காட்சிகள் எடுக்க வேண்டியிருக்கிறதாம்.
இந்தப் பகுதியை எடுத்துவிட்டால் கிட்டத்தட்ட படமே முடிந்தமாதிரி. மார்ச் முதல் வாரத்தில் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தொடங்கிவிடும் என்கிறார்கள் வெங்கட்பிரபு தரப்பில்.
அஜீத்தின் பொன்விழாப் படமான இதில் அர்ஜுன், த்ரிஷா, சினேகா, லட்சுமி ராய், அஞ்சலி எனபெரும் நட்சத்திரப் பட்டாளமே உண்டு. காமெடிக்கு சந்தானம் - பிரேம்ஜி!
எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால் மங்காத்தா வரும் மே 1-ம் தேதி ஜரூராக களமிறங்கிவிடும். அது என்ன மே 1... உழைப்பாளர் தின ஸ்பெஷலா என்கிறீர்களா?
அதான் இல்லை... அன்று அஜீத்தின் பிறந்த தினம்!


Click it and Unblock the Notifications











