1977: சென்சாருக்குத் தப்பிய முத்தம்!

ஆனால் சரத்குமார் நடிக்கும் '1977" படத்தில் இடம்பெற்றுள்ள முத்தக்காட்சி கொஞ்சம் வில்லங்கமான ஒன்றாம். சரத்-பர்ஸானா இடையிலான இந்த லிப் லாக் மிக சூடாக வந்துள்ளதாம்.
பொதுவாக இந்த மாதிரி முத்தக் காட்சிகளை கண்ணில் விளக்கெண்ணை ஊற்றிக் கொண்டு பார்த்து தணிக்கை செய்யும் சென்னார், இந்த முத்தக் காட்சியை மட்டும் விட்டுவிட்டார்களாம்.
இதுவரை வந்த சரத்குமார் படத்திலிருந்து வித்தியாசமாக இருக்கும் 1977. கடந்த சில நாட்களுக்கு முன் படம் பற்றிய கருத்தை அறிய, கல்லூரி மாணவர்கள், ஆட்டோ டிரைவர்கள், டாக்டர்கள் உள்ளிட்ட பலருக்கு படம் போட்டு காண்பித்தோம். இதில் அவர்கள் சொன்ன கருத்துக்கு ஏற்ப சில மாற்றங்களை செய்துள்ளோம்.
கல்லூரி மாணவர்களை இந்தப் படம் பெரிதும் கவர்ந்திருப்பது மகிழ்ச்சியளித்தது, என்கிறார் இயக்குநர் தினேஷ்குமார்.
சரத்குமார், நமீதா, பர்ஸானா உட்பட பலர் நடித்துள்ள படம் 1977. தினேஷ்குமார் இயக்கியுள்ளார். இந்தப் படம் வரும் மார்ச் 6-ம் தேதி ரிலீஸ் ஆகிறது.


Click it and Unblock the Notifications











