பைக் விபத்தில் முமைத்கான் படுகாயம்

இந்தப் படத்தில் அதிரடி போலீஸ் வேடத்தில் நடிக்கிறார் முமைத்கான். ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் நேற்றுமுன்தினம் ஷூட்டிங் நடந்தது. இயக்குநர் தர்மலிங்கா காட்சிகளைப் படமாக்கிக் கொண்டிருந்தார்.
அப்போது டாக்டர் ராமை பைக்கில் துரத்துவது போன்ற காட்சியில் நடித்தார் முமைத். பைக்கை அவர் வேகமாக ஓட்டி வந்தபோது, செட்டில் ஒரு இடத்தில் வழுக்கிவிட்டது. இதனால் நிலை தடுமாறி விழுந்தார் முமைத்கான்.
இந்தக் காட்சியின்போது வழக்கம்போல் அவர் மிகக் குறைந்த உடைகளே அணிந்திருந்தார். இதனால் விபத்தில் அவரது வலதுகால், தோள் பட்டையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.
உடனே அவரை படத்தின் ஹீரோ டாக்டர் ராம் தூக்கிக் கொண்டு கேரவனுக்கு ஓடினார். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இப்போது படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு, முமைத்கான் பூரண ஓய்விலிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











