ஜாக்குவாருடன் கட்டிப் புரண்டு சண்டை போட்ட பெண்கள்!

By Chakra

Anand and Swetha
ஆனந்த், ஸ்வேதா என்ற இளம் ஜோடியை வைத்து நானும் என் காதலும் என்ற படத்தை இயக்கி வருகிறார் ப்ரியமுடன், நிலாவே வா, தம், திருடா திருடி, பகவதி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் கலை இயக்குனராக பணியாற்றியவர் எஸ்.ஏ.சி. ராம்கி.

இவரது இயக்கத்தில் உருவாகும் முதல் படம் இது. ஹூரோயினாக அறிமுகமாகும் ஸ்வேதா ஒரு எம்.பி.ஏ மாணவி.

இந்தப் படத்தில் ஒரு புதிய முயற்சியாக, ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கத்துடன் இரண்டு இளம் பெண்களை மோத விட்டுள்ளார் இயக்குனர். அதுவும் கட்டிப்புரண்டு சண்டையாம்!.

மரியா மனோகர் இசையில் உருவான பாடல்களுக்கான காட்சிகளை போடிநாயக்கனூர், வத்தலக்குண்டு, தேனி, பழனியில் படம் பிடித்திருக்கிறார்களாம். படத்தில் ஒரு பாடலை விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் பாடியிருக்கிறார்.

கதை, திரைக்கதை, வசனம், கலை, இயக்கம் ஆகியவற்றை ராம்கியே கவனித்துக் கொள்ள, விஜய் மற்றும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம் மானேஜராக பணியாற்றிய ஜே.பி தான் படத்தைத் தயாரிக்கிறார்.

இந்தப் படத்துக்காக ஒரு வீடும் கட்டப்பட்டுள்ளது. கதையில் இந்த வீட்டுக்கு மிக பங்குண்டு என்பதால், அஸ்திகவாரம் அமைப்பதில் தொடங்கி கிரகப்பிரவேசம் வரை இதில் காட்சிகள் படமாக்கப்படுகின்றனவாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X