'ஐஸை'க் கடித்த அட்டை!

மணிரத்தினத்தின் ராவணா படப்பிடிப்பு கேரளாவின் கொச்சி வனப்பகுதியில் நடந்து வருகிறது. இதற்காக அபிஷேக் பச்சனும், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோரும் அங்கு முகாமிட்டுள்ளனர்.
விஷ ஜந்துக்கள் நிறைந்த வனப்பகுதியாம் அது. பாம்புகளும், அட்டைப் பூச்சிகளும் அளவில்லாமல் சுற்றித் திரியும் பகுதி என்பதால் உள்ளூர்க்காரர்களின் உதவியுடன் படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருக்கிறார் மணிரத்தினம்.
இந்த நிலையில் படப்பிடிப்பின்போது ஐஸ்வர்யா ராயை அட்டைப் பூச்சி ஒன்று கடித்து விட்டதாம். இதையடுத்து அந்த இடத்திலிருந்து ரத்தம் கொட்டியது. உடனடியாக அட்டையைப் பிடுங்கி எறிந்து முதலுதவி கொடுத்து சரி செய்தனாரம்.
இப்படி அட்டையும், பாம்புகளும் தொல்லை தந்தாலும் கூட முக்கியமான காட்சியைப் படமாக்க வேண்டியிருப்பதால் ஐஸ்வர்யா ராய் முகம் சுளிக்காமல் நடித்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அவரே அப்படி என்றால் மற்றவர்களைக் கேட்க வேண்டுமா. அத்தனை பேரும் மணிக்காக, விஷ ஜந்துக்களைப் பற்றிக் கவலைப்படாமல் நடித்துக் கொண்டுள்ளனராம்.
இப்போது படப்பிடிப்பு இடத்தில், ஒரு பாம்பாட்டியும் உடன் இருக்கிறார். பாம்பு ஏதாவது வந்தால் உடனே அவர் பிடித்து விடுகிறாராம்.
மணிரத்தினம் படம் எடுப்பது புதிதல்ல. இப்படி பாம்பாட்டியுடன் அவர் படம் எடுப்பது இதுவே முதல் முறை என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications











