பிபாஷாவுக்காக ஜான் ஷாப்பிங்!

அப்பாஸ் டயர்வாலாவின் புதிய படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் ஜான் ஆப்ரகாம். இதற்காக தற்போது லண்டனில் முகாமிட்டுள்ளார்.
அதேபோல மும்பையில் பெரிய வீடாக கட்டிக் கொண்டிருக்கிறார் பிபாஷா. இதற்காக லண்டனுக்கு சென்றிருந்த அவர் அங்கு ஷாப்பிங்கில் ஈடுபட்டார்.
சமீபத்தில்தான் லண்டனிலிருந்து திரும்பினார் பிபாஷா. தனது லண்டன் பயணம் குறித்து அவர் கூறுகையில், இரவெல்லாம் ஷூட்டிங்கில் இருக்கிறார் ஜான். இடையில் கிடைத்த கேப்பில் அமெரிக்காவுக்குப் போனவர் அங்கு தோஸ்தானா வெளியீட்டில் கலந்து கொண்டார். பின்னர் மறுபடியும் லண்டன் திரும்பி ஷூட்டிங் போய் விட்டார்.
அவர் செய்து கொண்டிருப்பதெல்லாம் ஷூட்டிங், அதை விட்டால் ஜிம் அதை விட்டால் தூக்கம்தான். எனக்காக நேரம் ஒதுக்க ரொம்பவே பிகு செய்து கொண்டார்.
லண்டனில் இப்போது கிளைமேட் அருமையாக உள்ளது. அதிலும் வீட்டு உபயோக சாதனங்களுக்கான கடைகள் அங்கு நிறைய உள்ளன. நான் நினைத்த பொருட்களையெல்லாம் பட்டியல் போட்டுக் கொண்டு வாங்கினேன். அப்படியும் சிலவற்றை வாங்க முடியாமல் போய் விட்டது.
அதை ஒரு லிஸ்ட் போட்டு ஜானிடம் கொடுத்து விட்டு வந்துள்ளேன் - எனக்காக வாங்கி அனுப்பி வையுங்கள் என்ற கட்டளையோடு என்கிறார் பிபாஷா.
ஜான் குறித்து மேலும் சில ரகசியங்களை கூறினார் பிப்ஸ். திரைப்பட பிரிமீயர்களுக்கு பெரும்பாலும் ஜானை கூட்டிக் கொண்டு செல்ல மாட்டாராம் பிபாஷா. காரணம், உள்ளே போய் படம் போட்டவுடனேயே தூங்கி விடுவாராம் ஜான். இதனால் தனக்கு சங்கடமாக இருப்பதாக கூறும் பிபாஷா, இதற்காகவே எந்தப் படத்துக்கும் அவரை நான் கூட்டிக் கொண்டு போவதே கிடையாது.
இதில் நான் பெங்காலி மொழியில் முதன் முதலாக நடிக்கும் ஷாப் சரித்ரா கல்போனிக் படத்தின் பிரீமியருக்கு அவரை எப்படிக் கூட்டிக் கொண்டு போகப் போகிறேன் என்று தெரியவில்லை என்று பயந்து வேறு போகிறார் பிபாஷா.
உலகப் பொருளாதாரப் பிரச்சினையை விட இது பெரும் பிரச்சினையாக இருக்கும் போலிருக்கே...


Click it and Unblock the Notifications











