twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாலை... சங்க கால காதல் கதையில் ஷம்மு!

    By Shankar
    |

    Shammu Palai Movie Still
    சங்க காலக் காதல் கதையை பாலை என்ற பெயரில் படமாக்கிக் கொண்டுள்ளனர். இந்தக் கதையின் நாயகியாக நடிப்பவர் ஷம்மு.

    கற்றது தமிழ் ராமிடம் உதவி இயக்குநராக இருந்த ம.செந்தமிழன் இந்தப் படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

    "மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் கதையை முதல் முறையாக படமாக்கிட்டு இருக்கோம். அந்தக் காலத்தில பயன்பட்ட வில்-அம்பு, ஈட்டி, கல் கத்திகளை உருவாக்கியிருக்கோம். போர்க் காட்சிகள் மிரட்டலா வந்துக்கிட்டிருக்கு. காதல், காமம், வீரத்தை மரபு மணம் மாறாமல் காட்டப் போறோம்“ என்கிறார் செந்தமிழன் பெருமிதத்துடன்.

    'பாலை' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் நாயகி காயாம்பூவாக நடிக்கிறார் 'காஞ்சிவரம்' ஷம்மு. வலன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் சுனில் புதுமுகம்.

    தஞ்சையை ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் இலை தழைகளை உடுத்தியிருந்த ஷம்முவுக்கும், இடுப்புத் துண்டு மட்டும் கட்டியிருந்த சுனிலுக்கும் காதல் காட்சிகளை நடித்துக் காட்டிக் (!) கொண்டிருந்த இயக்குநர் கிடைத்த இடைவெளியில் நம்மிடம் பேசினார்.

    "மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களைப் பற்றிய கதை பார்வையாளர்களுக்குப் புது அனுபவதைக் கொடுக்கும் என நினைக்கிறோம். ஷம்முவைத் தவிர எல்லோருமே புதுமுகங்கள். தொல்குடி மக்களைப் பற்றியது என்பதால் இருளர் சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்களை முக்கிய ரோல்ல நடிக்க வச்சிருக்கேன். வரலாற்றுப் படம் என்றாலே அரசர்களின் கதை என்ற வழக்கத்தை மாற்ற முயற்சிக்கிறோம். இரு இனக் குழுக்களுக்கு இடையிலான போர்தான் படத்தின் கரு. இந்தப் போர் ஏன்? இதில் யார் ஜெயிச்சாங்க? அப்படீங்கறதுதான் கதை.

    பழந்தமிழர்கள் வாழ்ந்த ஒரு கிராமத்தையே தஞ்சாவூரில் செட் போட்டு படப்பிடிப்பு நடத்தி வர்றோம். அந்தப் பகுதி மக்கள் தினமும் கூட்டம் கூட்டமா வந்து அந்த செட்டை ஆச்சர்யத்தோட பார்த்திட்டுப் போறாங்க. மர வீடு, ஆற்றின் நடுவே கட்டப்பட்ட இறைச்சி அறுக்கும் இடத்தை செட் என்று சொன்னால்தான் தெரியும். அந்தளவுக்கு தத்ரூபமாக செய்திருக்கிறோம்.

    மைசூர், கொடைக்கானல், பழனி, சத்தியமங்கலம், ஈரோடு, தஞ்சாவூர் என இன்றைய நாகரீகங்கள் போய் சேராத வனப்பகுதிகளைத் தேடித் தேடி கண்டுபிடித்து படப்பிடிப்பு நடத்தியிருக்கோம். இந்த லோக்கேஷன்களை கண்டுபிடிக்க நாங்க அலைஞ்சதே பெரிய கதை," என்கிற செந்தமிழன் இந்தப் படத்திற்காக ஆறு ஆண்டுகள் பழந்தமிழர்கள் வாழ்க்கையைப் பற்றி ஆய்வு செய்திருக்கிறார்.

    படத்தின் உரையாடலுக்குப் பயன்படுத்தியிருக்கும் ஒவ்வொரு வார்த்தையும் பல்வேறு தமிழ் இலக்கியங்களிலிருந்து தேடியெடுத்தாம்.

    பாலை படத்தின் ஒளிப்பதிவாளர் அபி நந்தன். வேத் சங்கர் என்பவர் இந்தப் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

    English summary
    Shammu, the heroine of Kanchivaram is playing lead role in Paalai movie. Based on Sangam age love story, the film is directed by Senthamizhan.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X