டாப்ஸ்லிப் போகும் ரஜினி-ஐஸ்வர்யா!

By Staff

Rajini with Aishwarya Rai
அமேசானில் தொடங்கிய ரஜினி- ஷங்கரின் பிரமாண்ட கனவுப் படம் எந்திரன் ஷூட்டிங் இப்போது சென்னையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அடுத்த கட்டப் படப்பிடிக்காக ரஜினி-ஐஸ்வர்யா ராயுடன் ஆனைமலைக்குச் செல்கிறது எந்திரன் குழு.

இங்குள்ள வால்பாறை மற்றும் டாப்ஸ்லிப்பின் இயற்கை அழகு கொஞ்சும் லொக்கேஷன்களில் சில தினங்கள் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டுள்ளார் இயக்குநர் ஷங்கர். வால்பாறை மற்றும் டாப்ஸிப் பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினியின் மிகப்பெரிய வெற்றிப் படங்களுள் ஒன்றான ராஜாதிராஜா படப்பிடிப்பின் பெரும்பகுதி வால்பாறை மற்றும் டாப்ஸ்லிப்பில்தான் படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

காமெடிக்கு சந்தானம்:

இந்தப் படத்தில் வடிவேலு, விவேக் போன்ற முன்னணி காமெடி நடிகர்கள் யாரும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. படத்தில் ரஜினிக்கு இரு வேடங்கள். அதில் ஒரு வேடம் காமெடி கலந்தாக இருக்கும் என்பதால், சில இரண்டாம் நிலைக் காமெடி நடிகர்களை மட்டும் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

அவர்களில் இப்போதைக்கு பெயர் அறிவிக்கப்பட்டுள்ளவர் லொள்ளு சபா புகழ் சந்தானம். ஏற்கெனவே ஷங்கர் தயாரிப்பில் அறை எண் 305-ல் கடவுள் படத்தில் நடித்தார். ரஜினியுடன் குசேலன் படத்திலும் நடித்திருந்தார். இவருடன் கருணாஸூம் ஒப்பந்தம் செய்யப்படுவார் எனத் தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X