இந்த ஆண்டே எந்திரன் வரும்- ஷங்கர்

ஒரு தயாரிப்பாளராக சன் பிக்ஸர்ஸ் தயாரிக்கும் முதல் படம் எந்திரன். ரஜினி ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார். டேனி டெங்ஸோங்பா வில்லனாக நடிக்கிறார்.
இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள், கிராபிக்ஸ் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. ஹாலிவுட்டின் சான்வின்ஸ்டன் ஸ்டுடியோஸ் இதனை கவனிக்கிறது.
இதற்கிடையில் இந்தப் படத்தின் பேட்ச் ஒர்க் காட்சிகளுக்காக மீண்டும் சில தினங்கள் படப்பிடிப்பினை நடத்தத் தீர்மானித்த ஷங்கர், நேற்று பெருங்குடி பகுதியில் ஷூட்டிங் நடத்தினார். இந்தக் காட்சிகளில் ரஜினியும் டேனியும் நடித்தனர்.
படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டது என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் மீண்டும் முக்கிய காட்சிகள் படமாவதாக செய்திகள் வந்ததால், படம் வெளியாவது தாமதமாகுமோ என கவலையுற்றனர் ரசிகர்கள். இந்த நிலையில் படம் இந்த ஆண்டே வெளியாகிவிடும் என்று ஷங்கர் பதில் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "எந்திரன் படம் இந்த வருடத்துக்குள் வருமா, அடுத்த ஆண்டு ஆகுமா என்றெல்லாம் சிலர் கேட்கின்றனர். அவர்களுக்கெல்லாம் நான் சொல்வது, 'எந்திரன் இந்த ஆண்டே வெளியாகும். அதுவும் சில மாதங்களில் வெளியாகும்' என்பதே" என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











