தாமிரபரணியில் 'குலசேகரனும் கூலிப்படையும்'!

தற்போது நெல்லை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை கதைகளமாக கொண்டு குலசேகரனும், கூலிப்படையும் என்ற படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
அம்பாசமுத்திரம், கல்லிடைகுறிச்சி, மணப்பாடு உள்ளிட்ட பகுதிகளில் 25 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் கொங்கரகுறிச்சி தாமிரபரணி ஆற்றுப் பகுதியில் படப்பிடிப்பு நடந்தது.
ஜல்லிகட்டு காளையை அடக்குவது போன்ற காட்சியும், மிருகங்களை வதைக்க கூடாது என்று கூறி பெண்களை திரட்டி கதாநாயகி உதயதாரா போட்டி நடத்துபவர்களிடம் வாக்குவாதம் செய்வது போலவும் காட்சிகள் எடுக்கப்பட்டது.
இப்படம் குறித்து இயக்குநர் சிவா கூறுகையில், குலசேகரனும், கூலிப்படையும் நான் இயக்கும் 2வது படமாகும். இப்படத்தில் உதயதாரா கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெரும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
படத்தில் ஜல்லிகட்டு போட்டி நடப்பது போல காட்சி எடுக்க திட்டமிட்டு இருந்தோம். இதற்காக மதுரையில் இருந்து அழைத்து வரப்பட்ட காளை கூட்டத்தை பார்த்ததும் மிரண்டு ஓடியது. இதனால் எங்களது படப்பிடிப்பு சிறிது நேரம் தடைப்பட்டது என்றார்.
படத்தில் பிரகாஷ் ராஜ், வடிவேலு, நட்டு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் படு வித்தியாசமான கேரக்டர்களில் வருகிறார்களாம்.


Click it and Unblock the Notifications











