காவேரி படத்தில் நிர்வாண காட்சி!

இதில் புதுமுக நடிகை ஒருவர் நிர்வாணமாக நடித்துள்ளார். இந்தக் காட்சிக்கு சென்சார் அனுமதி கிடைக்குமா அல்லது காதல் கதை படம் மாதிரி அலைக்கழிப்புக்கு உள்ளாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மலையாளம், தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருந்த காவேரி மாஸ்டர் சுரேஷ் என்கிற சூர்ய கிரணை திருமணம் செய்து சினிமாவில் இருந்து ஒதுங்கினார்.
நீண்ட நாட்களுக்கு பிறகு ஆத்தியாயம் 6 என்ற தமிழ் படத்தை தயாரிக்கிறார். தெலுங்கில் இதே படத்தை சேப்டர் 6 என்ற பெயரில் எடுக்கின்றனர். காவேரியின் கணவர் சூர்யகிரனே இயக்குகிறார். பாலா, சோனியா சூரி நடிக்கின்றனர்.
இந்த படத்தில் தான் அந்த நிர்வாண காட்சி இடம் பெறுகிறது. புதுமுக நடிகை துணிச்சலாக இதில் நடித்துள்ளாராம்.
இது பற்றி காவேரி கூறுகையில், கதைக்கு தேவை என்பதால் இப்படியொரு காட்சியை எடுத்துள்ளோம். ஆனால் .அதில் ஆபாசம் இருக்காது, பெண்ணின் முதுகுபகுதி மட்டும்தான் தெரியும். இந்த படத்தின் தயாரிப்பாளர், அதுவும் பெண் என்ற முறையில் எனக்கும் பொறுப்பு இருக்கிறது. என் கணவர் அக்காட்சியை எடுத்த போது நானும் அங்கு இருந்தேன்..." என்றார்.


Click it and Unblock the Notifications











