ஒரு பாட்டை 24 பேர் சேர்ந்து 24 மொழிகளில் பாடி புதிய சாதனை படைத்துள்ளனர்.

ஈசல் என்ற பெயரில் ஒரு படம் உருவாகி வருகிறது. இது ஒரு ஆவிக்கதை. ஆனால் பயமுறுத்தும் ஆவிக் கதையோ அல்லது மாயாஜாலங்கள் நிறைந்த மாந்த்ரீகக் கதையோ அல்ல. சற்று வித்தியாசமாக எடுத்திருக்கிறார்களாம்.
இப்படத்தில் நாட்டுப் பற்றை வெளிப்படுத்தும் வகையில் ஒரு பாடல் இடம் பெறுகிறது. அந்தப் பாட்டை 24 பேர் சேர்ந்து, 24 மொழிகளில் பாடியுள்ளனராம்.
நடிகர் பார்த்திபன் மலையாள வரிகளையும், நடிகர் சுரேஷ் கோபி தமிழ் வரிகளையும் பாடியுள்ளனர். இதுபோல ஒவ்வொரு மொழிக்காரரும், இன்னொரு மொழியில் பாடியுள்ளனர்.
இப்படி ஒரு பாடல் இதுவரை எங்குமே பாடப்படவில்லையாம். எனவே இது கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெறும் என படத்தின் இயக்குநர் விஜய் ஆதித்யா கூறுகிறார்.
இப்படத்தில் ஹீரோவாக மிதுனும், ஹீரோயினாக சுனு லட்சுமியும் நடிக்கிறார்கள்.
More from Filmibeat
ஈசல் ஈசல் பாடல் ஈசல் பாடல் புதிய சாதனை தமிழ் சினிமா பாடல் eeasal eeasal song eeasal song new record song tamil movies


Click it and Unblock the Notifications











