அனுயாவுக்கு அடித்தது சான்ஸ்... நண்பனில் இரண்டாவது நாயகி!
ஷங்கர் இயக்கும் நண்பன் படத்தில் இரண்டாவது நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார் எஸ்எம்எஸ் நாயகி அனுயா.
விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடிக்கும் நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக இலியானா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஊட்டியில் படப்பிடிப்பும் நடந்து வருகிறது.
இந்த நிலையில் இந்தப் படத்தின் இன்னொரு நாயகியாக சிவா மனசுல சக்தி, நகரம் படங்களின் நாயகி அனுயா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கதைப்படி இலியானாவின் அக்காவாக நடிக்கிறார் அனுயா. இந்தி 3 இடியட்ஸில் மோனா சிங் நடித்த வேடம் இது. படத்தின் முக்கியமான பிரசவ காட்சியில் அனுயா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments


Click it and Unblock the Notifications