twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    முருகதாஸ் படப்பிடிப்பில் ஆசிட் வீச்சு... துணை நடிகர்கள் பாதிப்பு!

    By Shankar
    |

    சென்னை: ஏஆர் முருகதாஸ் தயாரிக்கும் எங்கேயும் எப்போதும் படப்பிடிப்பில் ஆசிட் வீசப்பட்டதால் 7 துணை நடிகர் - நடிகைகளுக்கு வாந்தி - மயக்கம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    பிரபல இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சொந்த பட நிறுவனம் தொடங்கி, 'எங்கேயும் எப்போதும்' என்ற பெயரில் ஒரு புதிய படத்தை தயாரித்து வருகிறார். ஜெய்-அஞ்சலி ஜோடியாக நடிக்கும் இந்த படத்தை சரவணன் இயக்கிவருகிறார்.

    படத்தின் பெரும்பகுதி காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டு விட்டன. இறுதிக்கட்ட படப்பிடிப்பு, சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நேற்று நடந்தது. துணை நடிகர்-நடிகைகள் 150 பேர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாகி கொண்டிருந்தன.

    அப்போது மருத்துவமனை நிர்வாகிகளுக்கும், படப்பிடிப்பு குழுவினருக்கும் இடையே படப்பிடிப்பு கட்டணம் தொடர்பாக தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு குழுவினரை வெளியே போகும்படி, நிர்வாகிகள் கூறியதாகவும், படப்பிடிப்பு குழுவினர் வெளியேற மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

    அதைத்தொடர்ந்து அந்த இடத்தில் யாரோ ஆசிட்டை எடுத்து வந்து வீசியதாக கூறப்படுகிறது. இதனால், அங்கு நின்று கொண்டிருந்த துணை நடிகர்-நடிகைகள் 7 பேருக்கு வாந்தி-மயக்கம் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

    உடனடியாக அந்த 7 பேரும் பக்கத்தில் உள்ள வேறு ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதுதொடர்பாக, படப்பிடிப்பு குழுவினர் வளசரவாக்கம் போலீசில் புகார் செய்துள்ளனர். போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    English summary
    Nearly 7 junior assistants affected in a clash between the crew of Murugadass produce Engeyum Eppothum and a private hospital employees at Chennai on Thursday.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X