பாரிஸில் ஜெயம் ரவி-ஹன்ஸிகா!

கல்பாத்தி அகோரம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். ஏற்கெனவே நான்கு பாடல்களைப் போட்டுக் கொடுத்துவிட்டாராம்.
இந்தப் படத்துக்காக ஜெயம் ரவி, ஹன்ஸிகா உள்ளிட்ட குழுவினர் பாரிஸில் முகாமிட்டுள்ளனர். பாரிஸ் உள்ளிட்ட பிரெஞ்ச் நகரங்களில் பெரும்பாலான காட்சிகளைப் படமாக்குகிறார்கள். 90 சதவிகிதப் படப்பிடிப்பை இங்கேயே முடிக்கத் திட்டமிட்டுள்ள பிரபு தேவா, மீதியை சென்னை ஸ்டுடியோவில் படமாக்குவாராம்.
போக்கிரி படத்திற்கு பிறகு நீரவ் ஷா ஒளிப்பதிவாளராக பிரபுதேவாவுடன் மீண்டும் இணைகிறார்.
இந்தப் படத்தின் தலைப்பில் பரபுதேவாவுக்கு திருப்தியில்லையாம். நீளமான தலைப்பைச் சூட்ட வேண்டும் என்பதே அவரது விருப்பமாம். ஆனால் சரியாக அமையாததால் தற்காலிகமாக இச் - ஐ ஓகே செய்துள்ளாராம்!
Comments
இச் ஜெயம் ரவி பாரிஸ் பிரபுதேவா ஷூட்டிங் ஹன்ஸிகா hansika motwani ich jayam ravi paris prabhu deva shooting


Click it and Unblock the Notifications