படப்பிடிப்பில் மன்சூர் அலிகான் கை முறிவு

மாமல்லபுரம் அருகே இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இந்த விபத்து நடந்தது. உடனே அவரை அருகில் உள்ள லைஃப்லைன் மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை மேற்கெள்ளப்பட்டு வருகிறது. படப்பிடிப்பு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
குரூப் டான்சராக இருந்து. கேப்டன் பிரபாகரன் மூலம் வில்லனாக அறிமுகமான மன்சூர் அலிகான், வித்தியாசமான வில்லன்.
இப்போது விக்ரம் நடிக்கும் கந்தசாமி படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.
ஒரு காட்சியில் குதிரை மீது சவாரி செய்தபடி எதிரிகளைத் துரத்துவது போல நடிக்க வேண்டும். அப்போது வேகமாக குதிரை ஓடியதில் பேலன்ஸ் தவறி கிழே விழுந்தார் மன்சூர்.
இதில் அவர் வலது கை எலும்பு முறிந்தது. வலியால் துடித்த மன்சூரை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனால் அவர் சம்பந்தப்பட்ட பகுதிகளை 3 வாரங்கள் கழித்து எடுக்க முடிவு செய்துள்ளார் இயக்குநர் சுசி கணேசன்.
Comments


Click it and Unblock the Notifications