பாங்காக்கில் விஜய்- நயன்!

கிட்டத்தட்ட படம் முடிவடைந்து விட்ட நிலையில், இன்னும் ஒரு விறுவிறு சண்டைக் காட்சியும், மூன்று பாடல் காட்சிகளும் எடுக்க வேண்டியுள்ளதாம். அவற்றில் இரண்டு ஜிலுஜிலு காதல் டூயட் பாடல்களாம்.
இதற்குப் பொருத்தமான லொக்கேஷன்கள் பாங்காக்கில் இருப்பதால், அடுத்த பிளைட்டிலேயே தனது குழுவைக் கூட்டிக் கொண்டு பாங்காக் பறந்துவிட்டார் இயக்குநர் பிரபு தேவா.
உலகின் உல்லாசபுரி என வர்ணிக்கப்படும் புக்கட் தீவு மற்றும் தாய்லாந்தின் அழகிய கடற்கைகளில் பாடல்களை எடுக்கிறார்களாம். மூன்றாவது பாடலை ஹாங்காங் அல்லது சிங்கப்பூரில் எடுக்கத் திட்டமிட்டுள்ளாராம் பிரபு தேவா.
பாங்காங்கில் உள்ள ஸ்பெஷல் சீன ஸ்டன்ட் கலைஞர்களைக் கொண்டு சண்டைக் காட்சியை படமாக்குகிறார் பிரபு தேவா.
2009 பொங்கல் விருந்தாக வெளியாகிறது வில்லு.
Comments


Click it and Unblock the Notifications