சுனேனாவுக்கு 'வைரம்' கொடுத்த வம்சம் நாயகன்
வம்சம் படப்பிடிப்பின்போது தனது பெருமளவில் உதவியாக இருந்த நடிகை சுனேனாவுக்கு படத்தின் நாயகனும், முதல்வர் கருணாநிதியின் பேரனுமான அருள்நிதி வைரம் பதித்த டாலரைப் பரிசாக அளித்துள்ளாராம்.
முதல்வர் கருணாநிதியின் இளைய மகன் மு.க.தமிழரசுவின் மகன்தான் அருள்நிதி. தந்தையின் தயாரிப்பில், பாண்டிராஜின் இயக்கத்தில் உருவான வம்சம் படத்தின் மூலம் நாயகனாகியுள்ளார்.
புதுமுகம் என்பதால் படப்பிடிப்பில் பெரும் படபடப்போடு இருந்தாராம் அருள் நிதி. அப்போதெல்லாம் நாயகி சுனேனாதான் அருள்நிதியை அமைதிப்படுத்தி பல டிப்ஸ்களைக் கொடுத்து உதவியாக இருந்தாராம். குறிப்பாக டான்ஸ் போன்றவற்றில் அவர் கொடுத்த டிப்ஸ்கள் நிறையவாம். மேக்கப்பிலும் கூட நிறைய உதவி செய்தாராம்.
இதனால் நெகிழ்ந்து போன அருள் நிதி, சுனேனாவைக் கெளரவிக்கும் வகையில், வைரம் பதித்த டாலர் ஒன்றை பரிசாக கொடுத்து அசத்தி விட்டாராம். இதைப் பார்த்து சுனேனா நெகிழ்ந்து போய் விட்டாராம்.
பேரன் இப்படி என்றால், தாத்தா கருணாநிதியோ, அருள்நிதிக்கு தங்க கடிகாரம் ஒன்றைப் பரிசாகக் கொடுத்து குஷிப்படுத்தினாராம்.


Click it and Unblock the Notifications











