கேரளத்திலும் கருப்புக் கொடி-கழிவறையில் ஒளிந்த அசின்!

By Sudha

நடிகை அசினுக்கு எதிராக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டதால் பயந்துபோன அசின், கழிவறையில் ஒளிந்துகொண்டார்.

கோவை அருகே மேட்டுப்பாளையத்தில் நடிகர் விஜய் நடிக்கும் காவலன் படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இதில் அவருக்கு ஜோடியாக நடிகை அசின் நடித்து வந்தார்.

அசின் தடையை மீறி இலங்கை சென்றதைக் கண்டித்து ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் மேட்டுப்பாளையத்தில் படப்பிடிப்புக்கு அசின் வந்திருக்கும் தகவல் அறிந்ததும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டினர் பெரியார் திராவிட கழகத்தினர். இதில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

இதனால் படப்பிடிப்பு அங்கிருந்து கேரள மாநிலம் ஒத்தப்பாலம் அருகே உள்ள மணிச்சேரி கிராமத்துக்கு மாற்றப்பட்டது. அங்குள்ள ஜமீன் பங்களாவில் சில தினங்களாக காவலன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

நேற்று மாலை படப்பிடிப்பு நடந்த இடத்துக்கு சிலர் கருப்பு கொடி காட்ட வருவதாக தகவல் வந்தது. இதையடுத்து நடிகை அசின் அங்குள்ள ஒரு அறையில் சென்று ஓடி ஒழிந்து கொண்டார். அறையில் இருந்தபடியே ஜன்னல் வழியாக யாராவது வருகின்றனரா என்று எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்.

கருப்பு கொடி மிரட்டலை அடுத்து அசினுக்கு படப்பிடிப்பு தளத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வெளி நபர்களை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தனியறையில் இருந்தபடி படப்பிடிப்பில் கலந்து கொள்வதாக படப்பிடிப்பு குழுவினர் தெரிவித்தனர். இதற்கிடையே நடிகர் விஜய்யை பேட்டி எடுக்க சென்ற பத்திரிக்கையாளர்கள் தனியறையில் பதுங்கி இருந்த அசினை பார்த்து விட்டனர்.

இதுகுறித்து இயக்குநர் சித்திக்கிடம் கேட்டனர். அவரோ, "நடிகை அசின் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஷுட்டிங் முடிந்து விட்டதால் அவர் படப்பிடிப்பு தளத்தில் இல்லவே இல்லை" என்றார் ஒரேயடியாக.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X