ஸ்வீட்டான மல்லிகாவின் ஷூட்டிங்கில் ஹாட்டான ஜிலேபி

By Sudha

டபுள் தமால் இந்திப் படத்தின் ஷூட்டிங்கின்போது தினசரி 25 கிலோ அளவுக்கு ஜிலேபி உள்ளிட்ட ஸ்வீட் ஐட்டங்களை வாங்கி உள்ளே தள்ளியுள்ளனராம் மல்லிகா ஷெராவத்தும், படக் குழுவினரும்.

இந்திரகுமார் என்பவர் இயக்கியுள்ள படம் டபுள் தமால். இப்படத்தில் கங்கணா ரனவத், சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மல்லிகா ஷெராவத் ஹாட்டான ஐட்டம் பாட்டுக்கு ஆடியுள்ளார்.

ஜிலேபி பாய் என்ற பாட்டுக்கு அவர் போட்டுள்ள ஆட்டம் செம கிக்காக வந்துள்ளதாம். இந்தப் பாடலைப் படமாக்கியபோது யூனிட்டே செம குதூகலமாக இருந்ததாம். மல்லிகாவின் கவர்ச்சியைப் பார்த்து அல்ல- இயக்குநர் இந்திரகுமார் ஏற்பாடு செய்திருந்த இனிப்பு விருந்தினால்தான்.

இந்தப் பாடலில் படு கவர்ச்சிகரமான காஸ்ட்யூமில் ஆடிப் பாடியுள்ளாராம் மல்லிகா. பாடல் சிறப்பாக வர வேண்டும், அதற்கு எல்லோரும் உற்சாகமாக பணியாற்ற வேண்டும் என்பதற்காக படக் குழுவினருக்கு திகட்டத் திகட்ட இனிப்புகளை வாரி வழங்கினாராம் இந்திர குமார்.

இதற்காக படப்பிடிப்பு நடந்த நாட்களில் தினசரி 25 கிலோ இனிப்புகளை வாங்கி விநியோகித்தாராம். அதில் ஜிலேபிதான் முக்கிய இடம் பிடித்ததாம்.

இதில் விசேஷம் என்னவென்றால் மல்லிகாவே தனது கையால் ஜிலேபியை எடுத்து இயக்குநருக்கும், பிறருக்கும் ஊட்டினாராம். பிறகு அவரே ஏகப்பட்ட ஜிலேபிகளை எடுத்து சாப்பிட்டுத் தீர்த்தாராம்.

மகபூப் ஸ்டூடியோவில் இந்தப் பாடலைப் படமாக்கியபோது பட யூனிட்டே விழாக் கோலம் பூண்டிருந்தது. அனைவரும் மிகவும் சந்தோஷமாக இருந்தனர். பாடலும் சிறப்பாக வந்துள்ளது. இதை எதிர்பார்த்துத்தான் இனிப்புகளை வாரி வழங்க ஏற்பாடு செய்தேன் என்கிறார் இந்திரகுமார்.

மல்லிகா விற்ற 'ஜிலேபி' எப்படி இருக்கிறது என்பதை ரசிகர்கள் பார்த்துச் சொல்லட்டும்...!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X