கடலில் மூழ்கி தப்பிய ஹீரோ-ஹீரோயின்!

ஜெயமுண்டு பயமில்லை என்ற படத்தின் ஷூட்டிங்கில் நடந்தது இது. இதுபற்றி படத்தில் பிஆர்ஓ கூறியது:
கதாநாயகன் ஆதித்யா அன்புவும், கதாநாயகி தேவிகாவும் ஒரு படகில் தப்பித்து செல்வது போலவும், அவர்களை இன்னொரு படகில் வில்லன் கும்பல் துரத்தி செல்வது போலவும் சேஸிங் காட்சி, முதலில் படமாக்கப்பட்டது.
அதன்பிறகு, நடுக்கடலில் ஆதித்யா அன்புவும், வில்லன் கும்பலும் மோதுவது போல் சண்டைக் காட்சி படமானது.
அப்போது, எதிர்பாராதவிதமாக ஆதித்யா அன்புவும், தேவிகாவும் இருந்த படகு நிலைதடுமாறி, கவிழ்ந்தது. இரண்டு பேரும் கடலில் மூழ்கினார்கள். அதிர்ஷ்டவசமாக, கடல் நீச்சல் தெரிந்த மீனவர்களை தயாரிப்பாளரும், டைரக்டருமான வி.சி.பாலு, பாதுகாப்புக்காக உடன் அழைத்து வந்திருந்தார்.
அந்த மீனவர்கள் உடனே கடலில் குதித்து, கதாநாயகன் ஆதித்யா அன்புவையும், கதாநாயகி தேவிகாவையும் மீட்டு, கரைக்கு தூக்கி வந்தார்கள். மீனவர்களால் கதாநாயகனும், கதாநாயகியும் உயிர் தப்பினார்கள்.
இந்த சம்பவத்தையொட்டி, ஜெயமுண்டு பயமில்லை படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.
ஆதித்யா அன்பு காலில் பலத்த அடிபட்டிருந்தது. தேவிகா, நிறைய கடல் தண்ணீரை குடித்ததால், வாந்தி எடுத்தபடி இருந்தார். எனவே இருவரையும் சென்னைக்கு அழைத்து வந்து தனியார் மருத்துமவனையில் சேர்த்துள்ளனர். சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











