தாவணியில் தீ - பதறிய ஹீரோ!

நடிகர் சிங்கமுத்து மகன் வாசன் கார்த்திக், புதுமுகம் திவ்யா பத்மினி ஜோடியாக நடிக்கும் படம் அய்யன்.
இளையராஜா இசையமைக்க, கேந்திரன் முனுசாமி என்பவர் இயக்குநராக அறிமுகமாகும் படம் இது. இப்படத்தின் ஷூட்டிங், பரமக்குடியில் 2 நாட்களுக்கு முன் நடந்தது.
செங்கல் சூளை தீயில் திவ்யா பத்மினி சிக்கிக்கொள்வது போலவும் ஹீரோ வாசன் கார்த்திக் காப்பாற்றுவது போலவும் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது எதிர்பாராதவிதமாக திவ்யாவின் தாவணியில் தீப்பற்றிக்கொள்ள படப்பிடிப்புக் குழுவே பதறிப்போனது. நாயகன் வாசன் கார்த்திக்கும் காப்பாற்றப் பாய்ந்தார்.
இன்னொரு பக்கம் பயத்தில் அலற ஆரம்பித்துவிட்டார் திவ்யா பத்மினி.
உடனே படப்பிடிப்பு குழுவினர், ஷூட்டிங்கை நிறுத்தி விட்டு திவ்யாவின் மீது தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். பின்னர் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தப் பதட்டத்தால் அய்யன் படத்தின் ஒரு நாள் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது.
பத்திக்கிட்டது ஹீரோயின் தாவணியாச்சே - ஹீரோவால் பதறாமல் இருக்க முடியுமா!


Click it and Unblock the Notifications











