ஸ்பெயின் புறப்பட்டது கமல்-த்ரிஷா ஜோடி!

45 நாட்கள் இங்கு தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடக்கிறது. இந்தப் படத்தின் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமாருடன், படத்தில் நடிக்கும் - பணியாற்றும் 80 கலைஞர்களும் ஸ்பெயின் புறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மத்தியதரைக்கடலில் பிரமாண்டமான கப்பலில் பெரும்பகுதி ஷூட்டிங் இடம்பெறுகிறது. இதற்காகவே ஒரு சொகுசு கப்பல் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது.
எண்பது பேருக்கும் மேற்பட்ட கலைஞர்கள் வெளிநாட்டுப் படப்பிடிப்புக்குச் செல்வது இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.
முழுக்க முழுக்க ஐரோப்பாவில் எடுக்கப்படும் ஒரு படத்தில் நம்ம ஊர் கலைஞர்களும் இல்லாமலிருந்தால் நன்றாக இருக்காது என்பதாலேயே அத்தனை பேரையும் அழைத்து வரச் சொன்னாராம் கமல்.


Click it and Unblock the Notifications











