மதுரையில் அஞ்சலியிடம் சில்மிஷம்... ரசிகர்களுக்கு பளார்!

By Sudha

Anjali
அஞ்சலியிடம் சில்மிஷம் செய்த ரசிகர்கள் மீது பாய்ந்து பளார் பளார் என அறைவிட்டார் புதிய இயக்குநர்.

துரை தயாநிதி அழகிரி, விவேக் ரத்னவேல் ஆகிய இருவரும் இணைந்து 'கிளவுட் நைன் மூவீஸ்' சார்பில், 'தூங்கா நகரம்' என்ற படத்தை தயாரித்து வருகிறார்கள். இந்த படத்தில், விமல் கதாநாயகனாக நடிக்கிறார்.

இவருக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். கதாநாயகன் விமலின் நண்பர்களில் ஒருவராக நடிப்பதுடன், படத்தை இயக்குகிறார், கவுரவ். இவர், கே.எஸ்.ரவிகுமாரிடம் உதவி இயக்குநராக இருந்தவர்.

'தூங்கா நகரம்' படத்தின் படப்பிடிப்பு, மதுரை பஸ்நிலையத்தில் நடந்தது. விமல்- அஞ்சலியுடன், சென்னையில் இருந்து வரவழைக்கப்பட்டிருந்த 500 துணை நடிகர்- நடிகைகள் சம்பந்தப்பட்ட காட்சியை கவுரவ் படமாக்கிக்கொண்டிருந்தார்.

படப்பிடிப்பை வேடிக்கை பார்ப்பதற்கு, கட்டுக்கடங்காத அளவில் ரசிகர்கள் திரண்டு வந்திருந்தார்கள். அவர்கள் அப்படியே படப்பிடிப்புக் குழுவை சூழந்துகொண்டனர்.

அப்போது சில இளைஞர்கள் கும்பலாக வந்து, அஞ்சலியை சூழ்ந்து கொண்டனர். அவரை அப்படியே கைகளை நீட்டி கட்டிப் பிடிப்பது போல நெருக்க, அஞ்சலி அலற ஆரம்பித்த்தார். உடனே பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

படப்பிடிப்பு நடத்த முடியாத சூழ்நிலை உருவானது. நிலைமை கைமீறியது. சில ரசிகர்கள், அஞ்சலியின் கையைப்பிடித்து இழுத்தனர். சிலர் மேலே விழுவது போல வந்தனர். இதனால் கடுப்பான இயக்குநர் கவுரவ் அந்த ரசிகர்கள் மீது பாய்ந்து 'பளார்...பளார்' என அவர்களின் கன்னத்தில் அறைந்து, வெளியேற்றினார்.

அடிவாங்கிய ரசிகர்கள், 'நாங்க மதுரைக்காரர்கள். எங்கள் மேலயா கை வைக்கிறே?' என்று மிரட்டினார்கள். உடனே கவுரவ், 'நான் மட்டுமல்ல, இந்தப் படமே மதுரைக்காரங்க படம்டா' என்றாராம். அதற்குள் போலீசார் வந்துவிட இளைஞர்கள் பறந்தனர், கன்னத்தைத் தடவியபடி!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X