நமீதாவுக்கு குவியும் தெலுங்கு வாய்ப்புகள்!

காரணம் அவருக்கு தெலுங்கு தேசத்திலிருந்து குவியும் வாய்ப்புகள்தான்!
தெலுங்கில் அவர் சோலோ நாயகியாக இல்லைவிட்டாலும், அவர் நடித்த படங்கள் தொடர்ந்து வெற்றிபெற்று வருகின்றன. தெலுங்கு பில்லா சூப்பர் ஹிட்டானது.
இப்போது பாலகிருஷ்ணாவுடன் அவர் நடித்துள்ள சிம்மா வசூலைக் குவித்து வருகிறது. இந்தப் படத்தின் முதல் வார வசூல் மட்டும் ரூ 26 கோடி என்கிறார்கள்.
சிம்மாவின் வெற்றியைத் தொடர்ந்து 6 புதிய படங்களில் நடிக்க நமீதாவுக்கு வாய்ப்பு வந்துள்ளதாம்.
இதனால், தமிழில் சொந்தமாகப் படம் தயாரிக்கும் தனது திட்டத்தைக் கூட ஒத்திப் போட்டுவிட்டு, தெலுங்கி்ல் கவனம் செலுத்துகிறாராம் நமீதா. சென்னைக்கும் ஹைதராபாத்துக்கும் பறந்து கொண்டிருப்பதைவிட, ஹைதராபாத்திலேயே வீடு எடுத்து தங்கவும் முடிவு செய்துள்ளாராம்.
இந்தப் படத்தில் நயன்தாரா இன்னொரு நாயகி என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கும் புதிய வாய்ப்புகளைத் தேடித் தந்துள்ளதாம் இந்தப் படத்தின் வெற்றி.


Click it and Unblock the Notifications











