Don't Miss!
- News சொத்துக்குவிப்பு வழக்கு இன்று விசாரணை.. அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கோர்ட்டில் ஆஜர்!
- Technology கேபிள் டிவி கதையை முடிச்சு விட்ட அம்பானி! இனி மாசத்துக்கு வெறும் ரூ.29 தான்.. 2 JioCinema திட்டங்கள் அறிமுகம்!
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பசுமாட்டுக்கு பெயர் வைத்தது அசினை இழிவுபடுத்த அல்ல! - சுனேனா
இது அசினை இழிவுபடுத்துவதற்காக வைக்கப்படவில்லை என்று படத்தின் நாயகி சுனேனா தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "படத்தில் அழகான பசு மாடு முக்கிய கேரக்டரில் நடிக்கிறது. அதற்கு அசின் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. எனக்கும் கதாநாயகனுக்கும் காதல் தூதாக அந்த மாடுதான் போகிறது. கதாநாயகன்தான் அந்த பசு மாட்டை எனக்கு விற்பார். அதற்கு நான் அசின் என பெயர் வைப்பேன்.
கிராமங்களில் தங்கள் வீட்டு செல்லப் பிராணிகளுக்கு சினிமா நடிகைகள் - நடிகர்களின் பெயர்களைத்தான் இப்போதும் வைக்கிறார்கள். அதற்காக நடிகர் நடிகைகளை அவர்கள் இழிவுபடுத்துவதாகச் சொல்ல முடியுமா?
நான் மட்டுமின்றி படப்பிடிப்பு குழுவினர் எல்லோருக்குமே அசின் பசு மேல் பிரியம் அதிகம். எனக்கு மிருகங்களை பிடிக்கும். அசின் மீதும் மிகுந்த அன்பு காட்டினேன். நடிகை அசினை நாங்கள் எதற்காக அசிங்கப்படுத்தப் போகிறோம்", என்றார்.