ஷூட்டிங்கில் அமீர் காயம்

இயக்குநர் அமீர், யோகி என்ற படம் மூலம் நடிகராவும் கலக்க வருகிறார். இப்படத்தை சுப்ரமணியம் சிவா இக்குகிறார்.
நேற்று இப்படத்தின் சண்டைக் காட்சியை சென்னை அருகே படமாக்கினார் சிவா. அமீருக்கு டூப் போடலாம் என இயக்குநர் சொன்னபோது, இல்லை, நானே நடிக்கிறேன் என்று கூறயுள்ளார் அமீர்.
இதையடுத்து டூப் இல்லாமல் நடித்தார் அமீர். 40 அடி உயரத்திலிருந்து கீழே குதிப்பது போன்ற அந்தக் காட்சியில் டூப் இல்லாமல் குதித்தார் அமீர்.
துரதிர்ஷ்டவசமாக தரையில் விழுந்து பலமான அடிபட்டு விட்டது அமீருக்கு. அவரது மணிக்கட்டில் முறிவு ஏற்பட்டுள்ளதாம். உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அமீர், சிகிச்சைக்குப் பின்னர் மாலையில் வீடு திரும்பினார்.
அமீருக்கு காயம் ஏற்பட்டதால், தற்காலிகமாக படப்பிடிப்பை நிறுத்தி வைக்கிறார்களாம்.
Comments


Click it and Unblock the Notifications