அனந்தபுரத்து வீடு ஷூட்டிங் தொடக்கம்

By Staff

Anathapurathu Veedu
பிரம்மாண்டங்களுக்கு பெயர் போன இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பு நிறுவனம், எஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் அனந்தபுரத்து வீடு படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ளது.

முதல்வன், காதல், வெயில்,இம்சைஅரசன் 23-ம் புலிகேசி போன்ற பல வெற்றிப்படங்களை தந்த இந்நிறுவனத்தின் அடுத்த படைப்பு ஆனந்தபுரத்து வீடு.

இப்படத்தை மர்மதேசம், விடாதுகருப்பு, சிதம்பர ரகசியம் போன்ற வெற்றித் தொடர்களை இயக்கிய நாகா இயக்குகிறார்.

சின்னத்திரை வரலாற்றில் முதன் முறையாக தனது வித்தியாசமான இயக்கத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திரும்ப வைத்து, தனி முத்திரை பதித்த நாகா இயக்கும் முதல் திரைப்படம் இது.

இப்படத்தின் நாயகனாக நந்தா நடிக்க கதாநாயகியாக சாயாசிங் நடிக்கிறார். இவர்களுடன் கிருஷ்ணா,கலைராணி மற்றும் புதுமுகங்கள் நடிக்க ஆரியன் எனும் மூன்று வயது சுட்டிக் குழந்தை முக்கிய வேடத்தில் அறிமுகமாகிறான்.

அமெரிக்காவில் MFA பயின்ற அருண்மனிபழனி இப்படத்தின் ஒளிப்பதிவாளராக அறிமுகமாக, ரமேஷ்கிருஷ்ணா எனும் புதிய இசையமைப்பாளரின் இசையில், வைரமுத்து பாடல்களை எழுதுகிறார்.

கலை பாவானி சங்கர், சண்டைபயிற்சி சுப்ரீம் சுந்தர். மக்கள் தொடர்பு நிகில்.

படப்பிடிப்பு சென்ற மாத இறுதியில் கேரளாவில் தொடங்கி தொடர்ந்து மூணாறு,பொள்ளாச்சி ஆகிய இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X