மெக்ஸிகோவில் 'கந்தசாமி'!

விக்ரம், ஷ்ரியா இணைந்து நடிக்கும் கந்தசாமி படத்தின் ஷூட்டிங் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. சுசி.கணேசன் இயக்கி வரும் இப்படத்தின் ஷூட்டிங் மெக்ஸிகோவில் நடைபெறவுள்ளது.
இதற்காக 40 பேர் கொண்ட படப்பிடிப்புக் குழு திங்கள்கிழமை இரவு மெக்ஸிகோவுக்குப் பறந்துள்ளது. சண்டைக் காட்சிகள், 2 பாடல் காட்சிகளை அங்கு படமாக்கவுள்ளனராம்.
கடந்த மாதம்தான் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு முக்கிய டெக்னீஷியன்களுடன் மெக்ஸிகோ சென்று ஷூட்டிங் ஸ்பாட்களை பார்வையிட்டு இறுதி செய்து, அங்கு படப்பிடிப்பு நடத்துவதற்கான அனுமதியையும் பெற்றனர் என்பது நினைவிருக்கலாம்.
கோலிவுட்டில் இதுவரை யாருமே போயிராத இடங்களுக்கு கந்தசாமி யூனிட்டார் போகவுள்ளனராம்.
வருகிற தீபாவளிக்கு படத்தை திரைக்குக் கொண்டு வர தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தீர்மானித்துள்ளார்.
Comments


Click it and Unblock the Notifications