லண்டன் கலவரம்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பிரியங்கா சோப்ரா

By Siva

Priyanka Chopra
சென்னை: லண்டனுக்கு படபிடிப்புக்காக சென்ற பிரியங்கா சோப்ரா அங்கு நடக்கும் கலவரத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக செய்திகள் வந்துள்ளன.

கடந்த சனிக்கிழமை லண்டனின் வடக்கில் உள்ள டாட்டன்ஹாம் மாவட்டத்தில் கலவரம் மூண்டது. அப்போது அங்கு நடந்து வந்த அமைதியான ஊர்வலத்தின்போது போலீசார் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில் மார்க் டுக்கான் என்ற 29 வயது இளைஞர் உயிரிழந்தார். இவர் நான்கு குழந்தைகளுக்குத் தந்தை ஆவார். இதையடுத்து கலவரம் வெடித்து விட்டது.

லண்டன் கலவர பூமியாக காட்சியளிக்கிறது. தீவைப்பு, கல்வீச்சு, துப்பாக்கிச் சூடு, கடைகள், வர்த்தக நிறுவனங்கள் சூறையாடல், ஏடிஎம் இயந்திரங்களை சூறையாடுதல் என வன்முறைக் காடாக மாறியுள்ளது லண்டன். இங்கிலாந்தின் பிற பகுதிகளுக்கும் கலவரம் பரவி வருகிறது.

இந்நிலையில் நடிகை பிரியங்கா சோப்ராவும், நடிகர் ஷாஹித் கபூரும் படபிடிப்புக்காக லண்டனில் தங்கி இருந்தனர். அவர்கள் கலவரத்தில் சிக்கிக் கொண்டதாகவும் அதில் பிரியங்கா சோப்ரா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அவர்கள் இருவரும் பாதுகாப்பாக இருக்கி்ன்றனர் என்று அப்படத்தின் இயக்குனர் குனால் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X