பாங்காக்கில் மனோபாலா கைது

வில்லு பட ஷூட்டிங் பாங்காக்கில் நடந்து வருகிறது. இதில் பட்டையா தீவு பகுதியில் மனோபாலா பங்கேற்ற காட்சிகளை இயக்குநர் பிரபு தேவாவி்ன் மேற்பார்வையில், கேமராமேன் ரவிவர்மன் படமாக்கிக் கொண்டிருந்தார்.
தீவிரவாதியைப் போன்ற கெட்டப்பி்ல் மனோபாலா பைக்கில் போவது போல படமாக்கிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென வந்த போலீஸார் மனோபாலாவை மடக்கிப் பிடித்து கைது செய்து கூட்டிச் சென்றனர்.
இதைப் பார்த்து குழம்பி்ப் போனது வில்லு பட யூனிட். உடனடியாக தாய்லாந்து பாஷை தெரிந்த ஒரு மொழிபெயர்ப்பாளருடன் போலீஸாரை அணுகி விஷயத்தைக் கூறினர். இதைத் தொடர்நது நடந்தது படப்பிடிப்பு, நடித்தவர் காமெடி நடிகர் என தெரிய வந்தது போலீஸாருக்கு. அதன் பின்னர்தான் மனோபாலாவை விடுவித்தனர்.
இந்தப் பஞ்சாயத்தால் வில்லு பட படப்பிடிப்பு சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
Comments


Click it and Unblock the Notifications