சுப்பிரமணியபுரம் இந்தி ஷூட்டிங்: குண்டு வெடிப்பில் தப்பிய ரீமா!

மின்னலே, வல்லவன், திமிரு, ஆயிரத்தில் ஒருவன்,தூள் என பல படங்களில் நடித்தவர் ரீமா சென். தற்போது பாலா இயக்கும் அவன் இவன் படத்தில் நடித்து வருகிறார். ரீமாவின் சொந்த ஊர் கொல்கத்தா. தற்போது மும்பையில் வசிக்கிறார்.
சமீபத்தில் வாரணாசியில் நடந்த குண்டுவெடிப்பில் ரீமாசென் மயிரிழையில் உயிர் தப்பிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ரீமாசென் அருகிலேயே இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதை நேரில் பார்த்த அவர் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் இருக்கிறாராம்.
இதுபற்றி அவர் கூறுகையில், "த கேங்க்ஸ் ஆப் வாஸிபுர்" என்ற இந்திப் படத்தில் நடித்து வருகிறேன். தமிழில் வெளியான சுப்பிரமணியபுரம் படத்தின் ரீமேக் இது. இதன் படப்பிடிப்பு உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் நடந்து வருகிறது. இதற்காக நான் வாரணாசியில் முகாமிட்டு இருந்தேன்.
குண்டுவெடிப்பு நடந்த அன்று நான் வாரணாசியில் உள்ள கோவிலுக்கு சென்று சாமி கும்பிட தயாரானேன். என்னை அழைத்து செல்வதற்காக படப்பிடிப்பு குழுவினர் கார் அனுப்பினர். அந்த கார் வருவதற்கு தாமதமாகி விட்டது. அப்போதுதான் அந்த பயங்கரம் நடந்தது.
என் பக்கத்தில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. எங்கும் புகை மூட்டமாகவும் அலறல் சத்தமாகவும் இருந்தது. நான் நடுங்கினேன். நான் நின்றிருந்த இடத்தின் பக்கத்திலேயே இச்சம்பவம் நடந்தது. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினேன்.." என்றார்.
ரீமாசென் நடித்து வரும் “த கேங்க்ஸ் ஆப் வாஸிபுர்" படம் தமிழில் வெளியான “சுப்பிரமணியபுரம்" படத்தின் ரீமேக் ஆகும்.


Click it and Unblock the Notifications











