பிரபு தேவாவுடன் முதல்நாள் ஷூட்டிங்கில் நயன்தாரா!

மதம் மாறிய பின் முதல் நிகழ்ச்சியாக மும்பை சென்ற நயன்தாரா, அங்கு பிரபுதேவாவின் இரண்டாவது இந்திப் படமான ரவுடி ரதோர் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
இந்தப் படத்தில் அக்ஷய் குமாரும் சோனாக்ஷி சின்ஹாவும் நடிக்கின்றனர். ஷூட்டிங்கின் முதல் நாள் பிரபுதேவாவுக்கு துணையாக இருந்தார் நயன்.
தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் ஆண்டுக்கு ஒரு படம் செய்யத் திட்டமிட்டுள்ள பிரபு தேவா, இப்போது மும்பையில் தானும் நயனும் வசிப்பதற்கு புதிய ப்ளாட் ஒன்றையும் பார்த்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, திருமண ஏற்பாடுகளையும் மும்முரமாக கவனித்து வருகிறார்கள் இருவரும். அடுத்த மாதம் மும்பையில் திருமணம் நடக்கும் சிலரும், கொச்சியில்தான் திருமணம் என இன்னொரு தரப்பும் கூறி வருகிறது.
Comments


Click it and Unblock the Notifications