மயங்கி விழுந்தார் நடிகர் சாந்தனு!

By Chakra

Santhanu
கண்டேன் படப்பிடிப்பின்போது நடிகர் சாந்தனு திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இயக்குநர் கே.பாக்யராஜ் - பூர்ணிமா தம்பதியின் மகன் நடிகர் சாந்தனு, 'கண்டேன்' என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சண்டை காட்சி, சென்னை வி.ஜி.பி. கடற்கரையில் நேற்று படமாக்கப்பட்டது.

படப்பிடிப்பில் சாந்தனு, கதாநாயகி புதுமுகம் ரஷ்மி கவுதம், நகைச்சுவை நடிகர் சந்தானம், மற்றும் 10 ஸ்டண்ட் நடிகர்கள் கலந்துகொண்டார்கள். ஸ்டண்ட் நடிகர்களுடன் சாந்தனு மோதுவது போன்ற சண்டை காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தபோது, திடீரென்று சாந்தனு மயங்கி விழுந்தார்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தப்பட்டது. சாந்தனு முகத்தில் தண்ணீர் தெளித்து, குடிப்பதற்கு குளுக்கோஸ் கொடுத்தார்கள். அதன்பிறகு அவரை சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்கள்.

சிகிச்சைக்குப் பின்னர் உடல் தேறிய சாந்தனு கூறுகையில், "உடல் எடையை குறைப்பதற்காக, நான் கடந்த ஒரு வாரமாக உணவில் மிகவும் கட்டுப்பாடாக இருந்து வருகிறேன். தினமும் ஒருவேளை மட்டுமே சாப்பிடுகிறேன். நேற்று காலையில் எதுவும் சாப்பிடாமல் படப்பிடிப்புக்குச் சென்றேன்.

அது, ஒரு பெரிய, ரிஸ்க்கான சண்டை காட்சி. திடீரென்று தலை சுற்றுவது போல் இருந்தது. மயங்கி விழுந்து விட்டேன். சிகிச்சைக்குப்பின் நன்றாக இருக்கிறேன்...", என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X