கரும்பை இழுத்ததில் காயமடைந்த பாவனா!

கன்னடத்தில் புனீத் ராஜ்குமார் ஜோடியாக ஜாக்கி எனும் படத்தில் நடித்து வருகிறார் பாவனா.
சூரி இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் பெங்களூரிலிருந்து 40 கிமீ தொலைவில் நெடுஞ்சாலைப் பகுதியில் இன்று நடந்தது.
காட்சிப்படி நெஞ்சாலையில் புனீத் ராஜ்குமாருடன் பைக்கில் செல்லும் பாவனா, தங்களைக் கடந்து செல்லும் கரும்பு லோடு லாரியிருந்து ஒரு கரும்பைப் பிடித்து இழுக்க வேண்டும்.
காட்சி ஆரம்பித்ததும், கரும்பை லாரியிருந்து சற்று வேகமாக இழுத்துவிட்டார் பாவனா. இதில் நிலை தடுமாறிய புனீத்தின் கட்டுப்பாட்டிலிருந்து நழுவி தாறுமாறாக ஓடி, விழுந்ததாம் பைக். இதில் பாவனாவின் கை கால்களில் லேசான காயங்கள் ஏற்பட்டது.
இடது முழங்காலுக்கு மேல் சற்று பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் வீங்கிவிட்டதாம். டாக்டர்கள் பாவனாவை ஒருவாரம் ஓய்வெடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளனராம்.
More from Filmibeat
கன்னடப் பிடிப்பிடிப்பு கரும்பு காயம் பாவனா புனீத் ராஜ்குமார் லாரி bhavana injury kannadas film shoot puneeth rajkumar


Click it and Unblock the Notifications











