சினிமா வரலாற்றில் முதல்முறையாக குறியீட்டை தலைப்பாகக் கொண்ட படம்!

By Shankar

உலக சினிமா வரலாற்றில் முதன் முறையாக ஒரு சினிமா படத்தின் தலைப்புக்கு பதிலாக, ஒரு குறியிட்டை (Symbol) தலைப்பாக வைத்திருக்கிறார்கள். இங்கே வெளியாகியுள்ள குறியீடுதான் இப்படத்தின் தலைப்பு. இதன் அர்த்தம் ஆறு மெழுகுவர்த்திகள்.

இப்படியொரு குறியீட்டை மட்டுமே தலைப்பாகக் காட்ட ஒரு காரணம் உண்டு. படத்தின் திரைக்கதை 6 வருடம் , 6 மாதம் , 6 வாரம் , 6 நாட்கள் , 6 மணி நேரம் , 6 நிமிடம் , 6 நொடி என்ற காலப் பிரிவில் வருவது போல அமைக்கப்பட்டுள்ளது.

இப்படத்திற்காக ஷாம் பிரத்யேகமாக 6 விதமான கெட்டப்புகளில் தோன்றுகிறார்.

இப்படம், தமிழ்நாட்டில் தொடங்கி ஆந்திரா , மகாராஷ்ட்டிரா (மும்பை), போபால் , டெல்லி , கோவா , கான்பூர் , லக்னோ வரை சென்று இறுதியாக கல்கத்தாவில் முடிகிறது. கதை ஒவ்வொரு மாநிலம் வழியாக பயணிக்கும் போது அந்தந்த மாநிலத்தின் நாடக நடிகர்கள், கூத்துக் கலைஞர்களைப் பயன்படுத்தப் போகிறார்களாம்.

இப்படத்திற்காக, ஷாம் இருபதிலிருந்து, இருபத்தைந்து கிலோ வரை தன் உடல் எடையைக் குறைக்கப் போகிறார். இதற்காக டாக்டர் செல்வம் தலைமையில் பிஸியோதெரபிஸ்ட், டயட்டீசியன், யோகா மாஸ்டர், மெடிட்டேசன் குரு, ட்ரெய்னர் ஆகியோரைக் கொண்ட பிரத்யேகமாக மருத்துவக் குழுவே அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இயக்குநர் வி இஸட் துரை கூறுகையில், "இந்திய சினிமாவில் ஒரு கதாநாயகன் இவ்வளவு எடையைக் குறைத்து, தன்னை வருத்தி, பாத்திரத்துக்கு மெருகூட்டுவது இதுவே முதல் முறை. உலக சினிமா கலைஞர்கள் டாம் ஹேங்ஸ் (கேஸ்ட் அவே ), கிரிஸ்டின் பேல் (மெஷினிஸ்ட்) இவர்களைப் போல ஷாமும் கதாபாத்திரத்துக்காக மெனக்கெடுகிறார்," என்றார்.

மேலும், மலையாளத்தில் 1000 படங்களுக்கு மேல் நடித்த ஜெகதி ஸ்ரீ குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தமிழில் முதல் முறையாக இத்திரைப்படத்தில் நடிக்கிறார்.

ஜெயமோகன்

படத்துக்கான வசனத்தை ஜெயமோகன் எழுதுகிறார். மதி ஒளிப்பதிவை கவனிக்க , இசையை ஸ்ரீகாந்த் தேவாவும் , எடிட்டிங்கை ஆண்டனியும் கவனிக்கிறார்கள். கதை , திரைக்கதை இயக்கம் வி இஸட் துரை.

இப்போது போபாலில் இப்படத்தின் அடுத்த கட்டப் படப்பிடிப்பு நடக்கிறது!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X