கடலில் விழுந்த முமைத் கான் நீச்சலடித்து தப்பினார்!

By Staff

Mumaith Khan
பவுர்ணமி நாகம் படத்துக்காக கடலில் படப்பிடிப்பு நடந்தபோது, தவறி விழுந்துவிட்டார் கவர்ச்சி நடிகை முமைத் கான். ஆனால் அவருக்கு நீச்சல் தெரிந்ததால், சட்டென்று நீச்சலடித்து தப்பினார்.

தமிழ், தெலுங்கில் முன்னணி கவர்ச்சி நடிகையாகத் திகழ்பவர் முமைத்கான். திருச்சியைச் சேர்ந்த தமிழ்ப்பெண்ணான இவர் இவர் இப்போது நடித்து வரும் படம் பவுர்ணமி நாகம்.

விஜயமுரளி தயாரிப்பில், யார் கண்ணன் இயக்கத்தில் உருவாகும் இந்தப்படத்தின் ஷூட்டிங் மரக்காணம் அருகில் உள்ள முகலாயர் காலத்து ஆலம்பரா கடற்கரைக் கோட்டையில் நடந்து வருகிறது. அங்கு படப்பிடிப்புக்காக 3 மோட்டார் படகுகள் பயன்படுத்தப்பட்டன.

சூனியக்காரி நளினியை கொல்வதற்காக, நாக கன்னி முமைத்கான் பாம்பு உருவத்தில் விரட்டி செல்வது போல், படத்தில் ஒரு காட்சி இடம்பெறுகிறது.

இந்த காட்சியை 'யார்' கண்ணன் படமாக்கினார். ஒரு படகில் முமைத்கான், இன்னொரு படகில் நளினி, மற்றொரு படகில் காமிரா மேன் இருந்தனர். அப்போது முமைத்கான் இருந்த படகும், காமிரா வைக்கப்பட்டிருந்த படகும் மோதிக்கொண்டன. அதில், நிலைதடுமாறிய முமைத்கான் கடலில் விழுந்தார்.

அதைப்பார்த்து படப்பிடிப்பு குழுவினர் அலறினார்கள். முமைத்கான் விழுந்த பகுதியில் கடலின் ஆழம், 100 அடி.

ஆனாலும் முமைத்கான் அசரவில்லை. அவருக்கு நீச்சல் தெரிந்திருந்ததால், நீந்தியே வந்து, படகில் ஏறிக்கொணடார். தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தினர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X