ஏவிஎம்மில் ஏப்ரல் 20-ல் ராணா பூஜை!
ரஜினி மூன்று வேடங்களில் நடிக்கும் ராணா படத்தின் பூஜை ஏப்ரல் 20-ம் தேதி நடக்கிறது.
எந்திரனுக்குப் பிறகு ரஜினி மூன்று வேடங்களில் நடிக்கும் வரலாற்றுப் படம் ராணா. கேஎஸ் ரவிக்குமார் இயக்குகிறார். 12 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியும் ரவிக்குமாரும் இந்தப் படத்தில் இணைகிறார்கள்.
கதை, திரைக்கதையை ரஜினியே எழுதியுள்ளார். ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க, ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்தப் படத்துக்கான போட்டோ ஷூட் சமீபத்தில் நடந்தது. ரஜினியும் கதாநாயகி தீபிகா படுகோனும் கலந்து கொண்டனர். ஸ்க்ரிப்ட் வேலைகள் இப்போது முடிவுக்கு வந்ததால் பூஜைக்கான தேதியை அறிவித்துள்ளனர்.
வரும் ஏப்ரல் 20ம் தேதி, ரஜினிக்கு ராசியான ஏவிஎம் பிள்ளையார் கோயிலில் ராணா பூஜை நடக்கிறது. அங்கேயே முதல் காட்சியும் படமாக்கப்படுகிறது.
அதன் பிறகு ரஜினி - தீபிகா பங்கேற்கும் டூயட் பாடல் படப்பிடிப்புக்காக வெளிநாட்டுக்குச் செல்கிறார்கள்.
இந்தப் படத்தில் மொத்தம் 7 கதாநாயகிகள் நடிக்கின்றனர். அவர்களில் மூவர் ரஜினிக்கு ஜோடி. மற்றவர்களுக்கு முக்கிய வேடங்கள் தரப்பட உள்ளன. ராணாவில் நடிக்கும் நடிக நடிகையர் பற்றிய முழு விவரங்களும் இன்னும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











