படப்பிடிப்பில் நடந்த மோதலில் நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் மூக்கு உடைந்தது

வருசநாடு என்ற படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் கதாநாயகனாக நடிக்கிறார் குமரன். இவர் தைரியம் என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். இந்த படத்தை இயக்குகிறார் சூரிய பிரகாஷ்.
இந்த படத்தின் காமெடி காட்சி ஒன்று நேற்று படமாக்கப்பட்டது. இதில் நகைச்சுவை நடிகர்கள் எம்.எஸ்.பாஸ்கர், சிங்கமுத்து, சிங்கம்புலி, மயில்சாமி ஆகியோர் நடித்தனர்.
எம்.எஸ்.பாஸ்கர், சிங்கம்புலி ஒரு அணியாகவும், சிங்கமுத்து, மயில்சாமி இன்னொரு அணியாகவும் இருந்து ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ளும் காட்சி படமாக்கப்பட்டது.
இவர்கள் தாக்க பயன்படுத்தியது கைகளல்ல, கற்கள். அவ்வாறு எறியப்பட்ட கல் ஒன்று எம்.எஸ்.பாஸ்கரின் மூக்கில் பட்டு ரத்தம் கொட்ட ஆரம்பித்தது. தனக்கு மூக்கு உடைந்து ரத்தம் வருவதையும் பொருட்படுத்தாமல் அவர் ஏய், என் முக்கை உடைச்சிட்டான்...அடிடா...அடிடா என்று வசனம் பேசினாராம் பாஸ்கர்.
காட்சி முடிந்ததும், அவர் மூக்கில் இருந்து ரத்தம் வந்து கொண்டிருப்பதை பார்த்து டைரக்டர் சூர்யபிரகாஷ் பயந்துவிட்டார். உடனடியாக டாக்டரை வரவழைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்குப் பின் அவர் தொடர்ந்து நடித்தாராம்.


Click it and Unblock the Notifications











