குமரிக் கரையோரம் ஒரு குத்தாட்டம்!

By Sudha

Revathy
கன்னியாகுமரி மாவட்டம் மருங்கூர் என்ற இடத்தில் கடற்கரையோர ஹோட்டல் ஒன்றின் நீச்சல்குளத்தில் கவர்ச்சி நடிகை ரேவதி போட்ட குத்தாட்டத்தை, பெரும் திரளான மக்கள் திரண்டு வந்து பார்த்து ரசித்தனர்.

இந்திரஜித் என்ற இசையமைப்பாளர் கி.மு., சாமிடா, தண்டாயுதபாணி ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார். தற்போது இவர் யார் வேண்டுமானாலும் ககதையின் நாயகனாகி விடலாம் என்ற புதிய விதிப்படி திடீரென ஹீரோவாகி விட்டார்.

உயிரின் எடை 21 கிராம் என்ற பெயரில் உருவாகும் படத்தில் இவர்தான் ஹீரோ. அதேபோல இவரே இயக்கவும் செய்கிறார். இவருக்கு ஜோடியாக நடிப்பவர் வினிதா.

இப்படத்தின் இறுதிக் கட்ட காட்சிகளை குமரி மாவட்ட கடலோரப் பகுதிகளில் சுட்டு வருகின்றனராம். மருங்கூர் என்ற இடத்தில் உள்ள ராமனாதிச்சம்புதூரில் உள்ள ஒரு ஹோட்டல் நீச்சல் குளத்தில் பாடல் காட்சி ஒன்றை படமாக்கினர்.

இதில் கவர்ச்சி நடிகை ரேவதி, கவர்ச்சி சொட்டச்சொட்ட ஆடிப் பாடிய குத்துப் பாட்டை படமாக்கினர். இந்தக் காட்சி படமாவது அறிந்து அக்கம் பக்கத்து கிராம மக்கள் ஓடோடி வந்து விட்டனர். நீச்சல்குளத்தை கவர்ச்சிக் களமாக்கி ஆடிக் கொண்டிருந்த ரேவதியையும், அவரது ஆட்டத்தையும் பார்த்து ரசித்தனர்.

இதன் காரணமாக லேசான பரபரப்பு ஏற்பட்டது. இருந்தாலும் பிரச்சினைஏதும் இல்லாததால் படப்பிடிப்புக் குழுவினர் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X