ஆஸ்திரேலியாவுக்கு ஜக்குபாய்!

By Staff

Sarathkumar with Namitha
ஜக்குபாய் படக்குழுவினர் படப்பிடிப்புக்காக ஆஸ்திரேலியாவுக்கு பறந்துள்ளது.

ரஜினிக்காக கே.எஸ்.ரவிக்குமார் உருவாக்கியிருந்த கதைதான் ஜக்குபாய். ஆனால் அந்தப் படத்தை திடீரென ரஜினி விட்டு விட்டு சந்திரமுகிக்குப் போய் விட்டார். இதனால் ஜக்குபாயை கிடப்பில் போட்டு வைத்திருந்தார் கே.எஸ்.ரவிக்குமார்.

இந்தக் கதையை இப்போது சரத்குமாரை வைத்து உருவாக்கி வருகிறார் ரவிக்குமார். படப்பிடிப்புக்காக ஹீரோ சரத்குமார், ஹீரோயின் ஷ்ரியா உள்ளிட்டோர் அடங்கிய குழு ஆஸ்திரேலியா சென்றுள்ளது.

சிட்னி செல்லும் படக்குழுவினர் அங்கு சில முக்கிய காட்சிகளைப் படமாக்குகின்றனர்.

ஹீரோ, ஹீரோயினுடன், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், தயாரிப்பாளரும், சரத்குமாரின் மனைவியுமான ராதிகா சரத்குமார் ஆகியோரும் படக்குழுவினருடன் சென்றுள்ளனர்.

சிட்னி தவிர மெல்போர்ன் நகரிலும் படப்பிடிப்பு நடைபெறுகிறது. படத்தின் கிளைமாக்ஸ் காட்சியும் ஆஸ்திரேலியாவிலேயே படமாக்கப்படவுள்ளது. ஹெலிகாப்டர் சண்டைக் காட்சி இது.

3 வாரங்கள் கழித்து படக்குழுவினர் சென்னை திரும்புகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X