மாடு கன்று போட்ட காட்சி ... 10 மணி நேரம் காத்திருந்து படமாக்கிய மணிரத்னம்!!

By Chakra

Mani Rathnam
எதையும் பக்காவாகச் செய்ய வேண்டும் என்று நினைப்பவர் மணிரத்னம். தனது ராவணன் படம் அனைத்து விதங்களிலும் இயல்பான, கச்சிதமான படமாக அமைய வேண்டும் என்பதில் தீர்மானமாக உள்ளார். இதுவரை மணிரத்னம் இயக்கியதிலேயே அதிக பொருட் செலவு கொண்ட படம் இதுதான்.

சமீபத்தில் நடந்த ராவணன் படப்பிடிப்பில் ஒரு விஷயத்துக்காக 10 மணி நேரம் காத்திருந்து காட்சி ஒன்றைப் படமாக்கியுள்ளார் மணிரத்னம்.

பசு ஒன்று கன்றை ஈனும் காட்சி அது. இதற்காக கிராபிக்ஸ் செய்ய முயலாமல், நிஜமான பசு ஒன்று கன்று போடும் காட்சியையே படமாக்க விரும்பினார் மணி. மத்தியப் பிரதேச மாநிலம் ஓச்சா எனும் இடத்தில் படப்பிடிப்புக் குழுவினரோடு ஒரு மாட்டுத் தொழுவத்தில் 10 மணி நேரம் காத்திருந்தாராம்.

அவருடன் அபிஷேக் பச்சனும் இருந்தாராம். 10 மணி நேரமும் மொத்த யூனிட்டும் மாடு கன்று போடுவதற்காக காத்திருந்தனராம்.

அன்று மாலை எடுத்த காட்சியை போட்டுப் பார்த்த மணி ரத்னம், அந்தக் காட்சி வெகு இயல்பாக வந்ததில் திருப்தியடைந்தாராம்.

உண்மையிலேயே இது எங்களால் மறக்க முடியாத அனுபவம் என்று ராவணன் யூனிட் தெரிவித்தது.

இன்னும் சில தினங்களில் ராவணன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கவிருக்கின்றன. இம்மாத இறுதியில் படத்தின் பாடல்கள் வெளியாகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X